Sunday, June 30, 2013

பழங்களும் பயன்களும்

1. மலச்சிக்கலைப் போக்கும் *நறுவிலிப் பழம்*:

நறுவிலிப் பழத்தைத் தினசரியோ அல்லது மலச்சிக்கலின்போதோ சாப்பிட்டு வரமலச்சிக்கல் அற்றுப் போகும்.

2. தாகம் தணிக்கும் *ஆல்பகோடாப் பழம்*

காய்ச்சல் வந்தபின் நாக்கு உருசி மங்கி வறட்சியாகித் தாகம் அதிகரிக்கும்.
அப்போது, ஆல்பகோடாப் பழம் ஒன்று அல்லது இரண்டை வாயிலிட்டுச் சுவைக்கத் தாகம் தணியும். காய்ச்சல் விலகும்.

3. இளமை தரும் *தக்காளி*

இரத்தம், குடல் ஆகியவற்றைச் சுத்தம் செய்து இளமை தரும் தக்காளி,
மலச்சிக்கலையும் போக்கும்.

4. பேதியை நிறுத்தும் *எலுமிச்சம்பழம்*

எலுமிச்சம் பழச்சாறுடன் சர்க்கரை கலந்து 6 மணிக்கொருமுறை சாப்பிட்டு வர 2 நாளில் பேதி நின்றுவிடும்,

5. இன்பம் தரும் *இனிப்புக் கமலா*

இல்லற இன்பம் செழிக்க, 1 குவளை வெந்நீரில் இனிப்புக் கமலாப் பழத்தைப் போட்டுத் தேன் கலந்து சாப்பிட்டு வர தாதுபலமுண்டாகி, இல்லற இன்பம் செழிக்கும்.

6. விக்கலை நிறுத்தும் *கொய்யாப் பழம்*

கனிந்த கொய்யாப் பழம் சாப்பிட்டு வர விக்கல் வராது. இரைப்பை வலிமை பெறும்.

7. தலைக் கனம் குறைக்கும் *களாப் பழம்*

களாப் பழத்தை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர, தலையில் ஏறிய நீர் குறைந்து தலைக்கனம் குறையும்.

8. கருப்பைக்கு வலிமை தரும் *மாதுளை*

மாதுளை பழம் வாரம் 1 சாப்பிட்டு வர, கருப்பைக் குற்றம் வராது காக்கும்.
வயிற்றுக் கோளாறு வராது.

9. வாய்வுக்கும் *நாரத்தம் பழம்*

நாரத்தம் பழம் சிறிது சாப்பிட்டுவர வாய்வுக் கோளாறு நீங்கி வயிற்று உப்புசம் விலகும்.

10. கண்ணொளி தரும் *முந்திரிப் பழம்*

கொடி முந்திரிப் பழம் சாப்பிட்டு வர, கண் பார்வைத் துலங்கும்.

11. வெண்மேகம் தீர்க்கும் *கண்டங் கத்திரிப்பழம்*

கண்டங்கத்திரிப் பழம் 1 பிடி எடுத்து 2 குவளை நீரில் கொதிக்க வைத்துக் குழம்பு வைத்துக் குழம்புப் பதத்தில் தேங்காய் எண்ணை கலந்து பதத்தில் இறக்கி ஆறவைத்து வெண்புள்ளி மீது தேய்த்துவர அவை மறையும்.

12. காச நோய்க்குத் *தூதுளம் பழம்*

தூதுளம் பழத்தை அப்படியே 4 அல்லது 5 தினம் சாப்பிடக் காச நோய் தணியும். கபம் விலகும்.

13. கபால நரம்புகள் பலம் பெறப் *பலாப்பழம்*

பலாப்பழத்தைத் தேனுடன் கலந்து ஒன்றிரண்டு சாப்பிட்டு வர கபால நரம்புகள் வலிமை பெறும். அதிகம் சாப்பிட்டால் உடலில் சூடு உண்டாகும்.


14. பசியைத் 'துண்டும் *இலந்தைப் பழம்*

பகலுணவுக்குப் பின் இலந்தைப் பழம் சாப்பிட்டு வர, செரிமானம் தூண்டப்பெறும். அக்கினி மந்தம், கபக்கட்டு, பித்தம் விலகும்.

15. தாது விருத்தி தரும் *திராட்சை*

உலர்ந்த திராட்சைப் பழத்தைத் தேனில் ஊறவைத்துத் தினசரி பாலுடன் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர மலச்சிக்கல் விலகும். தாது விருத்தி பெறும்.


16. *பப்பாளிப் பழம்*

யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாளிப்பழம் தினம் கால் பழம் சாப்பிட்டு வர, வீக்கம் கரையும், உடலுக்கும் வலிமை சேர்க்கும்.

17. *வாழைப்பழம்*

மூளையில் செயல்திறனை ஊக்குவிக்கும் வாழைப்பழம். செவ்வாழை, மலைவாழை மூளையின் ஆற்றலைப் பன்மடங்கு பெருக்கும்.

18. *வில்வப் பழம்*

பாலில் கலந்து சாப்பிட மலச்சிக்கல் விலகும். வயிற்றுப் புண் ஆறும். சிறுநீரகம் நன்கு செயல்படும்.

19. *அரசம் பழம்*

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, தரமான அணுக்களை உருவாக்குவதில் அரசம் பழம் முதலிடம் பெறுகிறது.

20. *சீமை அத்திப்பழம்*

மூட்டு வலியைப் போக்கி ஆரத்தச் சோகையை விலக்குவதில் சீமை அத்திப் பழம் சிறப்பாக உதவுகிறது. தினசரி 2 சீமை அத்திப்பழத்தைப் பாலில் போட்டுச் சாப்பிட மூட்டுவலி போகும். இரத்தச் சோகை விலகும்.

21. *பேரீச்சம் பழம்*

இல்லற சுகம் சோர்வின்றி இயங்கத் தினசரி 4 பேரிச்சம் பழத்தை இரவு பாலுடன் சாப்பிடுங்கள்.

22. *தர்பூசணிப் பழம்*

கோடைக்கால வெப்பத்தைத் தணிவித்து மூலநோய் வராமல் தடுக்கத் தர்பூசணிப் பழத்துடன் சிறிது தேன்கலந்து சாப்பிடலாம்.

23. *முலாம் பழம்*

மலச்சிக்கலை உடைத்து உடலுக்கு உரமளிப்பது முலாம்பழம். உடம்பு 'எடை' போட இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

24. *விளாம்பழம்*

பித்தம் அதிகமாகிச் சித்தம் தடுமாறுபவர்கள் காம விகாரத்தால் அவதிப்படுவர்கள். விளாம்பழத்தைக் காலை வெறும் வயிற்றில் சிறிது வெல்லம் கலந்து பிசைந்து சாப்பிட, பித்தம் தணியும். காம உணர்வு கட்டுப்படும்.

25. *அன்னாசிப் பழம்*

குடலில் பூச்சி சேருவதை வெளியேற்றிச் சிறு கட்டிகள் இருந்தால் அதனைக் கரைத்துச் சீரணத்தைத் தூண்டுகிறது அன்னாசிப் பழச்சாறு+தேன். மழைக்காலத்தில சாப்பிட்டுவர, தொண்டைக்கட்டு நீங்கும்.

தொப்பையை குறைக்க வழி;

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.

* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி...ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.


* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.

* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.

* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.

* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.

* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.

* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.

இவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

Saturday, June 22, 2013


இளமையைக் கூட்டும் இளநீர்
**************************
செயற்கைக் குளிர்பானங்கள் பணத்தை மட்டுமல்ல, உடல் நலத்தையும் கெடுத்துவிடும். இயற்கை தந்த வரமாய் இளநீர் இருக்க, கூல்டிரிங்க்ஸ் தேவையற்றது. இளநீரின் விலையைப் போலவே, அது தரும் பலன்களும் அதிகம்.

இளநீரில் இருக்கும் இனிப்பான விடயங்கள் யாதெனில், ''இளநீர், நம் தாகத்தைத் தணித்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது. வைட்டமின்கள், தாது உப்புக்கள், என்சைம்கள், அமினோ அமிலங்கள், சைட்டோகைனின் ஆகியவை அதில் அதிக அளவு இருக்கின்றன.

பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்களான ரிபோஃப்ளேவின், நியாசின், தையமின், பைரிடாக்சைன், ஃபோலேட் போன்ற உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களும் அதிகம். 100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான சுண்ணாம்பு சத்து 29 மி.கி உள்ளது. ரத்த விருத்திக்குத் தேவையான இரும்புச் சத்து 0.1 மி.கி. இருக்கிறது. குளோரின் உப்பு 183 மி.கி. உள்ளது.

இளநீரின் மருத்துவப் பலன்கள்:

வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதிக அளவு நீர்ச் சத்து உடலில் குறையும். இதனைச் சமாளிக்க, இளநீர் அருந்தலாம். இளநீரில் உள்ள எலெக்ட்ரோலைட் பொட்டாசியம், உடம்பில் வயிற்றுப்போக்கினால் ஏற்படும் எலெக்ட்ரோலைட் குறைபாட்டை நீக்க உதவும்.

ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க இளநீர் உதவுகிறது. சர்க்கரை நோயாளிகள் இளநீர் பருகுவது நல்லது. இளநீரில் வளமான அளவு பொட்டாசியம் இருப்பதால், கூடுதல் ரத்த அழுத்தம் மற்றும் வாதத்திற்கும் இது நல்ல மருந்து.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கும். கால்சியம், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் கலவை அதிகமாக இருப்பதால், சருமத்துக்கு பொலிவைக் கொடுக்கும்.

முகத்தில் பருக்கள், புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை ஏற்பட்டால், இளநீரை இரவில் படுக்கும்போது முகத்தில் தடவி, காலையில் கழுவ வேண்டும். இதைத் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால், தோல் பிரச்னைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.

இதில் உள்ள செலினியம் போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்கள், புற்றுநோய்த் திசுக்களுக்கு எதிராகவும் செயல்படும். இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு இளமையையும் அள்ளித்தரும் அற்புத காயகல்பம். இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால், முதுமைத் தோற்றத்தை தடுக்கும். காலையில் இளநீர் குடிப்பது மிகவும் நல்லது.

இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால், உடலில் எடை குறைக்க விரும்புபவர்கள் தினமும் இளநீர் பருகலாம். தினமும் ஓர் இளநீர் குடித்துவந்தால். வாழ்நாள் முழுவதும் தெம்புடனும் உற்சாகத்துடனும் வலம் வரலாம்.

Friday, June 21, 2013


பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!

பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப்பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந் து, பெரியவர்கள் வரை இந்த பிரச் சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப்பற்கள் வரு வதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிகளவில் இனிப்புகளை சாப்பிடுவது.

அதுமட்டுமின்றி சில உணவுகள் பற்களில் இடையில் சிக்கிக் கொண்டு, நீண்ட நாட்கள் அவை பற்களில் இருப்பதால், பாக்டீரி யாக்கள் பற்களை அரிக்க ஆரம்பிக்கும். அவ்வாறு அரிக்க ஆரம்பிக்கும் போது, பற்களில் துவாரங்கள் ஏற்பட்டு, பின் அதனுள் நாம் உண்ணும் உணவுகள் சிக்கிக் கொண்டு, வாயில் நாற்றத்தை ஏற்படு த்தும்

ஆகவே பற்கள் நன்கு ஆரோக்கிய மாக இருப்பதற்கு தினமும் இரண்டு முறை பற்களை துலக்குவ தோடு, எதை சாப்பிட்ட பின்னரும் வாயை நீரினால் கொப்பளி க்க வேண்டும்.

அனைவருக்குமே சில உணவுகள் பற்களுக்கு நல்லது மற்றும் சில உணவுகள்கெட்டது என்பதுதெரியும் . அதிலும் பற்களுக்கு போதிய சத்து க்கள் இல்லையெனில் பற்களை கிருமிகள் எளிதில் தாக்கும். ஆகவே அவற்றிற்கு பலத்தை கொடுக்கும் வகையில், நார்ச்சத்து, கால்சியம் போன்றவை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது பற்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாமல், கிருமிகளை எதிர்த்துப்போடும் சில உணவுகளைப்பற்றிப் பார்ப் போமா!!!
இனிப்பில்லாத பழங்கள்

திராட்சை மற்றும் பீச் போன்ற பழங்க ளை சாப்பிட்டால், அவை பற்களின் துவார ங்களில் சிக்கிக் கொண்டு, அதில் உள்ள இனிப்புகள் துவாரங்களில் தங்கி கேடு விளைவிக்கும். ஆகவே அப்போது இனிப்பு கள் குறைவாக உள்ள பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப் பிட வேண்டும். இதனால் பற்கள் ஆரோக்கி யமாக இருக்கும். உதாரணமாக வெள்ளரிக்காயை சாப்பிடலாம்.
நார்ச்சத்துள்ள காய்கறிகள்

மற்ற உணவுப்பொருட்களை விட சில காய்கறிகளில் நார்ச் சத்துக்கள் அதிகம் இருக்கும். அதிலும் கேரட், பச்சை இலைக் காய்கறிகள் போன் றவற்றில் அதிக அளவில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சொத்தைப் பற்கள் ஏற்படாமல் தடு க்கும்.
தானியங்கள்

சுத்திகரிக்கப்படாமல் இருக்கும் தானியங்கள் கூட பற்களுக்கு சிறந்தது. அதிலும் சொரசொரப்பா ன தானியங்களான கம்பு, சோளம் மற்றும் ப்ரௌன் அரிசி போன்ற வை கூட பற்களில் ஏற்படும் சொத்தை களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
உலர் திராட்சைகள்

உலர் திராட்சைகளில் ஒரு சில ப்ளேவோனா ய்டுகள் மற்றும் போட்டோபீனால் இருப்பதா ல், வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமி களை கட்டுப்படுத்தும். இறுதியில் எந்த சொத் தைப் பற்கள் வராமல் இருக்கும்.
கடல் உணவுகள்

கடல் உணவுகளான இறால், கடல் சிப்பிகள் போன்றவற்றில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் நிறைந் துள்ளது. இவை பற்களை வலுவாக்கி, கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கின் றன.
இனிப்பில்லாத சூயிங் கம்

சாதாரணமாக சூயிங் கம் பற்களு க்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத் தும். ஆனால் அவ்வா று அவற்றை மெல்லும் போது வாயில் ஒருசில அமிலங்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அவை பற்களுக்கு ஒரு பெரிய பாதுகாப்பு படலத்தை உண் டாக்குகின்றன. ஆகவே அதற்கு இனிப்பில்லாத சூயிங் கம்மை சாப்பிட்டால் நல்லது.
புதினா இலைகள்

பொதுவாக புதினா ஒரு இயற்கை கிருமி நாசினி. ஆகவே எந்த ஒரு இனிப்புகளை சாப்பிட்டாலும், உடனே சில புதினா இலை களை வாயில்போட்டு மென்று சாப்பிட்டா ல், பற்களில் கிருமிகள் தங்காமல் இருக் கும்.


செவ்வாழை பழத்தின் மருத்துவ குணங்கள்:-

பல்வலி குணமடையும்

பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

சொரி சிறங்கு நீங்கும்

சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். சிரங்குக்கு மருந்து போடாவிட்டாலும், செவ்வாழைப்பழத்தை தொடர்ந்து ஏழுநாட்களுக்கு சாப்பிட்டு வர சருமநோய் குணமடையும்.

நரம்பு தளர்ச்சி குணமடையும்

நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும். எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
குழந்தை பேறு தரும்

குழந்தை பேறு தரும்

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர். அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும். தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தொற்றுநோய் தடுக்கப்படும்

தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது. வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்.

மாலைக்கண்நோய்

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.